கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவொன்று இரத்தினபுரியில் நிருவப்பட்டது

வெள்ள அவசரகாலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கும் நோக்கில், கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவொன்று 2021 மே 11 அன்று இரத்தினபுரி புதிய நகரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

இரத்தினபுரி நகரத்துக்கு அருகில் செல்லும் கலு கங்கையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலுக்கு பெய்யும் கனமழையால் இரத்தினபுரி நகரமும் அதைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளும் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றது. அதன் படி வெள்ள அபாயத்தின் போது விரைவாக பதிலளிக்கவும் நிவாரண நடவடிக்கைகள் திறமையாக மேற்கொள்ளவும் இந்த கடற்படை விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு இரத்தினபுரி புதிய நகரத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன் இந்த பிரிவில் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழுவொன்றும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

இரத்தினபுரி நகரம் மற்றும் சுற்றியுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்ற பகுதிகளுக்கு எளிதில் அணுகக்கூடியதாக இந்த கடற்படை விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு நிறுவப்பட்டுள்ளதுடன் எதிர்காலத்தில் வெள்ள பேரழிவு ஏற்பட்டால் பேரழிவு மேலாண்மை மையத்துடன் ஒருங்கிணைந்து நிலைமையை எளிதில் நிர்வகிக்கவும், பொதுமக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க முடியும்.