மோசமான வானிலை குறித்து கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

இந்த நாட்களில் பெய்யும் மழையால் எதிர்கால வெள்ள அபாயங்கள் மற்றும் இயற்கை பேரழிவுகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (2021 மே 13) களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கல பிரதேச செயலக பகுதிக்கு கடற்படை விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவின் இரு குழுக்கள் நிறுவ கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

களுத்துறை மாவட்டம் ஊடாக செல்லும் கலு கங்கையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு பெய்யும் கனமழையால், கலு கங்கை மற்றும் அதன் துணை கங்கைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் புலத்சிங்கல சுற்றியுள்ள தாழ்வான பகுதிகள் வெள்ள அபாயத்தில் உள்ளன. இதன் விளைவாக, பேரழிவு முகாமைத்துவ மையம் மூலம் புலத்சிங்கல பிரதேச செயலாளர் விடுத்த வேண்டுகோளுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படை கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவின் இரு குழுக்கள் (02) புலத்சிங்கல பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

இது தவிர, கடந்த சில நாட்களில் வெள்ள அபாயத்தைக் குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் சேர்ந்து தண்ணீர் ஓட்டம் தடுக்கபட்ட பல பாலங்கள் மற்றும் கால்வாய்கள் கடற்படையினரால் சுத்தம் செய்யப்பட்டதுடன் தற்போதுள்ள கோவிட் 19 அபாயத்தின் போதிலும் நாட்டில் ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால் பொதுமக்களுக்கு உதவி வழங்க கடற்படை தயாராக உள்ளது.