காலி மாவட்டத்தில் வெள்ள ஆபாயம் கொண்ட பல பகுதிகளில் கடற்படை நிவாரண குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன

காலி மாவட்டத்தில் வெள்ள ஆபாயம் கொண்ட நாகொட மற்றும் தவலம பிரதேச செயலகங்களுக்கு கடற்படையின் விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரணப் பிரிவில் நான்கு குழுக்கள் நிறுவ இன்று (2021 மே 13) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

பலத்த மழை காரணத்தினால் காலி மாவட்டத்தில் நாகொட, உடுகம மற்றும் தவலம பகுதிகளூடாக செல்லும் கிங் கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் இதன் விளைவாக, இந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தப் பின்னணியில், தெற்கு கடற்படை கட்டளை மூலம் நாகொட பிரதேச செயலகத்தில் நாகொட மற்றும் உடுகம பகுதிகளுக்கு 02 கடற்படை விரைவான பதில், மீட்பு மற்றும் நிவாரண குழுக்களையும், தவலம பிரதேச செயலகத்துக்கு 02 நிவாரணக் குழுக்களையும் அணுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையில், நிலவும் வானிலை நிலைமை மோசமடைந்துவிட்டால், விரைவாக நடவடிக்கைகளை மேற்கொள்ள மேலும் 06 நிவாரண குழுக்களை தெற்கு கடற்படை கட்டளையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.