வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க மேலும் மூன்று கடற்படை நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டன

நிலவும் கடும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு நிவாரணம் வழங்குவதற்காக இன்று (2021 மே 14) மாலை கம்பஹ மற்றும் காலி மாவட்டங்களுக்கு மேலும் மூன்று கடற்படை நிவாரண குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதன்படி, கம்பஹ மாவட்டத்தில் கூரவளான மற்றும் பியகம பகுதிகளை உள்ளடக்கி இரண்டு (02) நிவாரணக் குழுக்களும், காலி இமதூவ பகுதி உள்ளடக்கி ஒரு நிவாரணக் குழுவும் நிறுத்தப்பட்டன. அதன்படி, தற்போது கம்பஹ, களுத்துறை, காலி மற்றும் மாதர மாவட்டங்களில் 13 கடற்படை நிவாரணக் குழுக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி மற்றும் நிவாரணம் வழங்கி வருகிறது.

மேலும், பாதகமான காலநிலையை எதிர்கொண்டு பொதுமக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கவும் நிவாரண குழுக்களை அனுப்பவும் கடற்படை தயாராக உள்ளது.