கடற்படை நிவாரண குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கி வருகின்றன

சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ள அவசரநிலைகளின் விளைவாக, பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு நிவாரணம் வழங்க மேலும் 02 கடற்படை நிவாரண குழுக்கள் இன்று (2021 மே 15) கம்பஹ மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.

அதன்படி, கம்பஹ, களுத்துறை, காலி மற்றும் மாதர மாவட்டங்களின் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளில் 15 நிவாரண குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளதுடன் கடற்படை நிவாரண குழுக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குகின்றன, இப்பொது வெள்ள நீர் குறைந்து வருவதால் பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான உதவிகளை வழங்குகின்றன.

மேலும், காலி பத்தேகம பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் அப் பகுதியில் சிக்கித் தவித்த இரண்டு பெண்கள் (02) மற்றும் இரண்டு ஆண்கள் (02) காலி பத்தேகம பகுதியில் இணைக்கப்பட்ட கடற்படை விரைவான பதில் மற்றும் மீட்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர்.

அதே நேரத்தில், நாட்டில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கடற்படை தயாராக உள்ளது.