கொழும்பு துறைமுகத்திற்கு அருகே நங்கூரமிட்ட கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் 2021 மே 20 அன்று பகல் தீ விபத்து ஏற்பட்டதாக வெளியான தகவலுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படை இலங்கை கடற்படை கப்பல் சாகர மற்றும் சிந்துரல என்ற ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் மற்றும் துரித தாக்குதல் படகொன்று குறித்த பகுதிக்கு அனுப்பியது. தற்போது, இந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்தும் பணிகளுக்காக துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான ஒரு இழுபறி படகும் (01) இணைக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட இந்த கப்பல், 2021 மே 15 அன்று இந்தியாவின் ஹசிரா துறைமுகத்திலிருந்து 25 டன் நைட்ரிக் அமிலமுடன் (Nitric acid) பல இரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் 1486 கொள்கலன்களைக் கொண்டு பயணித்ததுடன் 2021 மே 19 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைவதற்கு முன்பு 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்டபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. துன்பகரமான கொள்கலன் கப்பலில் பிலிப்பைன்ஸ், சீன, இந்திய மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 25 நபர்கள் உள்ளனர்.

2021 மே 20 ஆம் திகதி மாலை, இலங்கை துறைமுக ஆணையம் மற்றும் இலங்கை கடற்படையின் நிபுணர்கள் குழு கப்பலுக்குள் நுழைந்து அதன் நிலையை ஆய்வு செய்ததுடன் கப்பலில் கொண்டுவரப்பப்பட்ட இரசாயனங்கள் எதிர்வினையால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர். மேலும், அவசர சூனலையின் போது உடனடிக்கையாக நடவடிக்கை எடுக்க கடற்படை சிறப்புப் படைகளும் கடலோர காவல்படையும் தயாராக உள்ளனர், தற்போது இலங்கை துறைமுக ஆணையத்தின் இழுபறி படகுகள் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொண்டு வருகிறது.