வக்வெல்ல மற்றும் அகலிய பாலங்களில் சிக்கிய குப்பை கூளங்கள் கடற்படையினரால் அகற்றப்பட்டது

கின் கங்கை குறுக்கே உள்ள வக்வெல்ல மற்றும் அகலிய பாலங்களில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர் 2021 மே 21 ஆம் திகதி ஈடுபட்டுள்ளனர்.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆற்றின் உயரும் நீர் மட்டம் இத்தகைய குப்பைகளை சிக்க வைக்கிறது. மேலும், இந்த குப்பை கூளங்கள் வக்வெல்ல மற்றும் அகலிய பாலங்களில் சிக்கி, படிப்படியாக நீரின் ஓட்டத்தைத் தடுக்கிறது.

இது தொடர்பாக நிலையான கவனம் செலுத்தும் கடற்படை தெற்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த சிறப்பு கடற்படையினர் குழுவொன்று குறித்த இடத்திற்கு அனுப்பி குப்பை கூளங்கள் அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.