ரூ .39 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

2021 மே 22 ஆம் திகதி யாழ்ப்பாணம் தொண்டமநாரு கடலோரப் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு ரோந்துப் பணியின் போது, கடற்கரையில் கைவிடப்பட்ட சுமார் 131 கிலோ மற்றும் 800 கிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

மே 22 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணம் தொண்டமநாரு கடலோரப் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய சிறப்பு ரோந்துப் பணியின் போது, கடற்கரையில் கைவிடப்பட்ட 4 பைகளில் நிரம்பியுள்ள சுமார் 131 கிலோ மற்றும் 800 கிராம் கேரள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்த கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு சுமார் ரூ 39.54 மில்லியன் என்று நம்பப்படுகிறது.

கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் பறிமுதல் செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் இன்று (2021 மே 23) வடக்கு கடற்படை கட்டளையில் தீ வைத்து அழிக்கப்பட்டது.