“கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டுள்ள கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த கடற்படையின் உதவி” என்ற தலைப்பின் கீழ் 2021 மே 22 அன்று வெளியிடப்பட்ட செய்தி வெளியீடுயுடன் தொடர்பானது

கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட MV X-PRESS PEARL என்ற கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீ இப்போது கட்டுப்பாட்டு அறை அமைந்துள்ள கப்பலின் பின் பகுதிக்கு பரவுகிறது. வானிலையின் மாற்றத்தால் ஏற்பட்ட பலத்த காற்று காரணமாக தீ அதிகரித்துள்ளதுடன் இப்போது கப்பலின் குழுவினர் மற்றும் மீட்பு நிறுவனத்தின் நிபுணர்கள் தீ பிடித்த கப்பலில் இருந்து பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்தப் பின்னணியில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வேண்டுகோளின் பேரில், தீயணைப்பு திறன்களைக் கொண்ட இந்திய கடலோர காவல்படையின் கடல் மாசு தடுப்பு கப்பலொன்று இன்று இரவு குறித்த நடவடிக்கைக்காக வர உள்ளது. கூடுதலாக, தீயணைப்பு கருவிகள் மற்றும் எண்ணெய் சேதத்தைத் தடுக்கும் இரசாயனங்கள் கொண்ட ஒரு டோர்னியர் விமானமும் எந்தவொரு அவசர நிகழ்விற்கும் பதிலளிக்க தயாராக உள்ளது. இதற்கிடையில், கடற்படைத் தளபதி மேற்கு கடற்படை கட்டளையின் செயல்பாட்டு அறைக்கு வருகை தந்து முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்து மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ஆகியோருக்கு அடுத்த நடவடிக்கைகளுக்காக தேவையான வழிமுறைகளை வழங்கினார்.

மேலும், நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடல் அலைகளால், கப்பல் இப்போது சற்று வலதுபுறம் சாய்ந்துள்ளது. இதனால், கப்பலின் கொள்கலன்கள் சில கடலில் விழுந்தன, மேலும் சில மூழ்கிவிட்டதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக, இந்த குறிப்பிட்ட கடல் பகுதியைத் தவிர்ப்பதற்காக இப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீன்பிடி சமூகத்திற்கு கடற்படை அறிவுறுத்துகிறது.