இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த 04 இந்திய மீன்பிடிப் படகுகள் திருப்பி அனுப்பப்பட்டன

இலங்கை கடலுக்குள் அங்கீகாரமற்ற முறையில் நுழைவதைத் தடுப்பதற்காக கடற்படையினர் நடத்திய சிறப்பு ரோந்துப் பணிகளின் காரணமாக இலங்கை கடலுக்குள் நுழைய முயன்ற 40 நபர்கள் கொண்ட மேலும் நான்கு இந்திய மீன்பிடி படகுகளை 2021 மே 29 ஆம் திகதி கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்டது.

சட்டவிரோத வெளிநாட்டினர் கடல் வழியாக இலங்கைக்கு நுழைவதால் நாட்டில் கோவிட் 19 தொற்றுநோய் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இக் காரணத்தினால் 24 மணி நேர ரோந்துப் பணிகளை அதிகரிப்பதன் மூலம் இலங்கை கடல் பகுதியின் பாதுகாப்பை வலுப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னாருக்கு வடக்கு கடல் பகுதியில் மேற்னொண்டுள்ள இந்த சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது இலங்கை கடலுக்குள் நுழைய முயன்ற 40 நபர்கள் கொண்ட நாங்கு இந்திய மீன்பிடி படகுகளை திருப்பி அனுப்பப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படை தொடர்ந்து இலங்கை கடல் பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.