செயலிழந்த இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் சதுப்பு வாயில்களை மீட்டெடுக்கும் நடவடிக்கை

புத்தலம் மாவட்டத்தில் உள்ள இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் செயலிழந்த நான்கு (04) சதுப்பு வாயில்கள் 2021 மே 28 ஆம் திகதி கடற்படையின் உதவியுடன் சரிசெய்யப்பட்டன.

இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் சதுப்பு வாயில்கள் தூக்கும் பொறிமுறை செயலிழந்த காரணத்தினால் குறித்த நீர்த்தேக்கம் மூலம் குடிநீர் விநியோகம் உட்பட யல மற்றும் மஹ பருவங்களில் சாகுபடிக்கு 4600 ஏக்கர் புதிய நிலங்கள் உட்பட 6539 ஏக்கர் பரப்பளவில் நீர் விநியோகித்தல் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பொறிமுறையை மீட்டெடுக்க உதவுமாறு நீர்ப்பாசனத் துறையின் வேண்டுகோளுக்கு கடற்படை உடனடியாக பதிலளித்து, 2021 மே 24 அன்று வடமேற்கு கடற்படைக் கட்டளையிலிருந்து ஒரு சுழியோடி குழுவை இங்கினிமிட்டிய நீர்த்தேக்கத்தின் சதுப்பு வாயில்களை சரிசெய்ய அனுப்பியது.

கடந்த சில நாட்களாக பாதகமான வானிலை இருந்தபோதிலும் கடற்படை சுழியோடி குழு நான்கு நாள் தொடர்ச்சியான சுழியோடி நடவடிக்கையை மேற்கொண்டு, நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் சதுப்பு வாயிலிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்த சதுப்பு வாயில்களைத் தூக்கும் கேபிளை மீண்டும் நிறுவியது. அதன்படி, சுழியோடி செயல்பாட்டின் காரணமாக தூக்க முடியாத நான்கு (04) சதுப்பு வாயில்களை தூக்கும் வழிமுறைக்கு மே 28 அன்று மீண்டும் ஒழுங்கு செய்யப்பட்டது.

மேலும், எந்தவொரு அவசர காலத்திலும் கடற்படை தனது தொழில்முறை உதவியை வழங்க எப்போதும் தயாராக உள்ளது.