தீ பிடித்த MV X-PRESS PEARL கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய கடற்படை பங்களிப்பு

இலங்கை கடற்படை நீர்நிலை பிரிவினால் இயக்கப்படும் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமைக்கு (NARA) சொந்தமான சமுத்ரிகா (RV SAMUDRIKA) ஆராய்ச்சி கப்பல் MV X-PRESS PEARL கப்பலின் தீ விபத்து மூலம் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 2021 ஜூன் 01 ஆம் திகதி பாதிக்கப்பட்ட கப்பல் உள்ள கடல் பகுதியில் கடல் நீர் மாதிரிகள் சேகரித்துள்ளது.

இலங்கையில் கடல்சார் ஆய்வுகளை மேற்கொள்ளும் ஒரே ஆய்வுக் கப்பலான 'சமுத்ரிகா' கப்பலின் செயல்பாடு நடவடிக்கைகள் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் கடற்படை பொறுப்பேற்ற பின் கடற்படை நீர்நிலை பிரிவு அதிகாரிகள் மற்றும் தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முகமையத்தின் (NARA) விஞ்ஞானிகள் இணைந்து பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அதன் படி MV X-PRESS PEARL கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்வதற்காக கடற்படை 2021 ஜூன் 01 அன்று தேசிய நீர்வாழ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து கடல்சார் ஆராய்ச்சிப் பயிற்சியைத் தொடங்கியது.