வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினரால் உடனடி நிவாரணம்

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்ளடக்கி 13 நிவாரண குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளது.

அதன்படி, மேற்கு மாகாணத்தில் கம்பஹ மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வெள்ள ஆபத்துள்ள கம்பஹ, ராகம, மஹபாகே, கெளனி, புலத்சின்ஹல மற்றும் பரகொட பகுதிகளும், காலி மற்றும் மாதர மாவட்டத்தின் தவலம, ஹினிதும, நாகோட, ஏப்பல, மாபலகம மற்றும் அதுரலிய பகுதிகளும் உள்ளடக்கி கடற்படை நிவாரண குழுக்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடற்படை நிவாரண குழுக்கள் தற்போது கம்பஹ மாவட்டத்தில் (ஜூன் 04, 2021) வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தீவை பாதிக்கும் மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை கூடுதல் நிவாரண குழுக்களையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.