வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்தலம் மாவட்டத்தில் 29 நபர்கள் கடற்படையால் மீட்பு

நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழை காரணத்தினால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு, தெற்கு, சபராகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்கள் உள்ளடக்கி கடற்படை விரைவான பதில் மற்றும் மீட்பு பிரிவின் 16 குழுக்கள் கடற்படை அனுப்பியுள்ளது. அதன் படி 2021 ஜூன் 4 அன்று புத்தலம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 29 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டது.

அதன்படி, புத்தலம் மாவட்டத்தில் கீரியங்கள்ளி, புலிச்சிகுளம் மற்றும் பன்துலுஒய பகுதிகளில் பெய்த கனமழையால் 10 குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 29 பேர் கடற்படையினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

மேலும், வெள்ள சூழ்நிலையை எதிர்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதுக்காக மேற்கு மாகாணத்தின் கம்பஹ மற்றும் களுத்துர மாவட்டங்களில் கம்பஹ, ஜா-எல, ராகம, புலத்சின்ஹல, பரகொட ஆகிய பகுதிகளிலும், தெற்கு மாகாணத்தில் காலி மற்றும் மாதர மாவட்டங்களில் தவலம, ஹினிதும, நாகொட, ஏப்பல, அத்திமலை மற்றும் அதூலிய ஆகிய பகுதிகளிளும், வடமேற்கு மாகாணத்தின் புத்தலம் மாவட்டத்தில் கிரியங்கள்ளி, புலிச்சிகுளம் மற்றும் பத்துலுஒய ஆகிய பகுதிகளிளும் சபரகமுவ மாகாணத்தில் இரத்னபுரி மாவட்டத்தில் எலபாத மற்றும் கலவான ஆகிய பகுதிகளிளும் கடற்படை வெள்ள நிவாரண குழுக்களை நிறுத்தைப்பட்டுள்ளன.

மேலும், வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு கடற்படை கூடுதலான நிவாரண குழுக்களை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.