வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹ மற்றும் களுத்துறை மாவட்டங்களில் 66 நபர்கள் கடற்படையினரால் மீட்பு

கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு, தெற்கு, சபரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களை உள்ளடக்கி 33 நிவாரண குழுக்களை கடற்படை நிறுத்தியுள்ளது. அதன் படி இன்று (2021 ஜூன் 05) பிற்பகல் கடற்படையினரால் கம்பஹ மற்றும் களுத்துறை மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சிக்கித் தவித்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 66 பேர் மீட்கப்பட்டனர்.

அதன்படி, கம்பஹ மாவட்டத்தில் ஜா-எல பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 61 பேரும், கலுத்துரை மாவட்டத்தில் புலத்சின்ஹல பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 பேரும் உட்பட 66 பேர் இவ்வாரு கடற்படையால் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நேரத்தில், கடற்படை 33 குழுக்களை கம்பஹ, களுத்துறை, கொழும்பு, இரத்னபுரி, காலி, மாதர மற்றும் புத்தலம் மாவட்டங்களில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளுக்கு அனுப்பியுள்ளதுடன் 11 கடற்படை நிவாரணக் குழுக்கள் தேவைக்கு ஏற்ப, தயாராக உள்ளது.