வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கம்பஹ மாவட்டத்தில் மேலும் 27 நபர்கள் கடற்படையினரால் மீட்பு

கடற்படை நிவாரண குழுக்கள் இன்று (ஜூன் 06, 2021) கம்பஹ மாவட்டத்தில் ஜா-எல பகுதியில் கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள் உட்பட 27 நபர்களை மீட்டனர்.

மேலும், தற்போதைய வெள்ளம் காரணமாக கஷ்டங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக கம்பஹ, களுத்துறை, கொழும்பு, இரத்னபுரி மற்றும் காலி மாவட்டங்களில் வெள்ள அபாயம் உள்ள பகுதிகளை உள்ளடக்கி 33 கடற்படை நிவாரண குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

கூடுதலாக, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க கூடுதலான நிவாரண குழுக்கள் தயாராக உள்ளது.