கடலில் சுகவீனமுற்ற நிலையில் இருந்த மேலும் ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

பேருவலைக்கு தென்மேற்கே சுமார் 85 கடல் மைல் (சுமார் 157 கி.மீ) ஆழ்கடல் பகுதியில் ஏற்பட்ட அவசர சூழ்நிலை காரணமாக கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த மற்றொரு மீனவரை சிகிச்சைக்காக கரக்கு கொண்டு வந்து உடனடி சிகிச்சைக்கு அனுப்ப இன்று (2021 ஜூன் 07) கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

2021 ஜூன் 01 ஆம் திகதி பேருவலை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற ஆறு (06) மீனவர்களைக் கொண்ட 'தேஷி' என்ற பல நாள் மீன்பிடி படகில் ஒரு மீனவர் சுகவீனமுற்ற நிலையில் இருப்பதாக கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த அறிவிப்புக்கு கடற்படை உடனடியாக பதிலளித்து, சுகவீனமுற்ற நிலையில் இருக்கும் மீனவரை சிகிச்சைக்காக அழைத்து வர இலங்கை கடற்படைக் கப்பலான 'சயுர' அனுப்பியது. சயுர கப்பலால் நோயாளியை மீட்டெடுத்து முதலுதவி வழங்கி காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட்ட பின் கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகு மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டு சிகிச்சைக்காக காலி கராபிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டும் கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.