ரூ .1758 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான சுமார் 219 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கடற்படையினரால் பறிமுதல்

கடற்படையினரால் வெலிகம, பொல்வதுமோதர கடற்கரை பகுதியில் 2021 ஜூன் 12 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 219 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடற்படை நடத்திய இந்த சிறப்பு நடவடிக்கையின் போது, பல நாள் மீன்பிடிப் படகொன்று மூலம் வெலிகம கடல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் வெலிகம, பொல்வதுமோதர பகுதியிலிருந்து டிங்கி படகொன்று மூலம் பிரதான நிலப்பகுதிக்கு கொண்டு சென்று மறைத்து வைக்க முயன்ற சாக்குகளிலும் எரிவாயு சிலிண்டர்களிலும் வைக்கப்பட்டிருந்த சுமார் 219 கிலோ 800 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இவ்வாரு கடற்படையால் கைப்பற்றப்பட்டன. மேலும், கடத்தலில் ஈடுபட்ட ஒன்பது சந்தேக நபர்களையும் பல நாள் மீன்பிடி படகொன்றும் டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

ஹெராயின் கொண்டு செல்லப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையால் கைப்பற்றப்பட்ட பல நாள் மீன்பிடி படகு 2021 மே 11 ஆம் திகதி மாதர கொட்டேகொட மீன்பிடி துறைமுகத்தை விட்டு வெளியேறியதுடன், சர்வதேச கடலில் வெளிநாட்டு கடத்தல்காரர்களிடமிருந்து போதைப்பொருற்களை குறித்த படகு பெற்றுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையில், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஹெராயின் போதைப்பொருளின் தெரு மதிப்பு ரூ. 1758 மில்லியனுக்கும் மேல் என்று நம்பப்படுகிறது.

கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள்கள் வெலிகம, அஹங்கம, திக்வெல்ல, கொட்டேகொட, இஹலவத்த, மிரிஸ்ஸ, பொல்வதுமோதர மற்றும் பிலியந்தல பகுதிகளில் வசிக்கும் 26 முதல் 43 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து கடற்படை மற்றும் போலீஸ் போதைப்பொருள் பணியகம் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றன.