ரூ .52 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான மற்றொரு கேரள கஞ்சா பொதி கடற்படையினரால் வட கடலில் பறிமுதல் செய்யப்பட்டது

யாழ்ப்பாணம், தொண்டமனாரு கடல் பகுதியில் 2021 ஜூன் 20 ஆம் திகதி இரவு நடத்தப்பட்ட சிறப்பு ரோந்துப் நடவடிக்கைகளின் போது, 174 கிலோ மற்றும் 50 கிராம் கேரள கஞ்சா மற்றும் 05 கிலோ கிராம் உலர் மஞ்சளுடன் ஒரு டிங்கி படகு மற்றும் 02 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தீவைச் சுற்றி ரோந்து பணிகளை அதிகரித்துள்ளது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் P 177 கடலோர காவல்படை படகு மற்றும் சிறப்பு படகுகள் படையின் Z 196 மற்றும் Z 215 என்ற படகுகளை பயன்படுத்தி 2021 ஜூன் 20 ஆம் திகதி இரவு யாழ்ப்பாணத்தின் தொண்டமநாரு கடல் பகுதியில் மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு நடவடிக்கையின் போது கரையை நோக்கி பயணித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன். அப்போது 05 பார்சலில் இரந்த 174 கிலோ மற்றும் 50 கிராம் கேரள கஞ்சா மற்றும் ஒரு பார்சலில் உள்ள சுமார் 5 கிலோகிராம் உலர்ந்த மஞ்சளுடன் இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு ரூ .52 மில்லியனுக்கும் மேல் என்று நம்பப்படுகிறது.

கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 முதல் 34 வயதுக்குட்பட்ட பருத்தித்துறை மற்றும் முல்லைதீவு பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கேரள கஞ்சா, மஞ்சள் மற்றும் டிங்கி படகு ஆகியவற்றயுடன் சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசந்துரை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.