‘610 கடல் மைல் தூரத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

இலங்கையின் தென்கிழக்கில் உள்ள பெரிய இராவண கலங்கரை விளக்கத்திலிருந்து (Great Basses) சுமார் 610 கடல் மைல் (சுமார் 1129 கி.மீ) தூரத்தில் நடைபெற்ற விபத்தொன்றால் காயமடைந்த இலங்கை பல நாள் மீன்பிடி படகொன்றில் மீனவரை சிகிச்சைக்காக இலங்கை கடற்படை கப்பல் சயுரல மூலம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு கொண்டு வந்து உடனடி சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்ப கடற்படை இன்று (2021 ஜுலை 18) நடவடிக்கை எடுத்துள்ளது.

2021 ஜூன் 29 ஆம் திகதி காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற ஆறு (06) மீனவர்களைக் கொண்ட ‘SGS' (பதிவு எண் IMUL-A-0878 GLE) என்ற மீன்பிடி படகில் ஏற்பட்ட திடிர் விபத்தால் ஒரு மீனவரின் அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட வெற்று காயம் காரணமாக, அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கடற்படை தலைமையகத்தில் உள்ள கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த அறிவிப்புக்கு கடற்படை உடனடியாக பதிலளித்து, காயமடைந்த மீனவரை சிகிச்சைக்காக அழைத்து வர இலங்கை கடற்படைக் கப்பலான 'சயுரல' அனுப்பியதுடன் இலங்கை கடற்படை கப்பல் 'சயுரல' 2021 ஜுலை 17 ஆம் திகதி காலை 0700 மணி அலைவில் பாதிக்கப்பட்ட மீனவர் உள்ள கடல் பகுதிக்கு சென்று தேவையான முதலுதவி அளித்து ஆழ்கடலில் இருந்து இன்று காலை (2021 ஜூலை 18) ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அவர் கொண்டு வந்த பின் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டுள்ள கடல்சார் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.