32 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது

வெத்தலகேணி, கடைகாடு கடற்கரை பகுதியில் 2021 ஜூலை 22 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது, 107 கிலோ மற்றும் 840 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான வெத்தலகேணி கடற்படை முகாமின் கடற்படையினர் 2021 ஜூலை மாதம் 22 ஆம் திகதி கடைகாடு கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள இந்த சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது அருகிலுள்ள காடுக்குள் தப்பிக்க முயன்ற ஒரு சந்தேக நபரை சோதனை செய்து அவரிடமிருந்த 16 கேரள கஞ்சா பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த சந்தேக நபரை மேலும் விசாரித்தபோது கிடைத்த தகவலின் படி, மேலும் 24 கேரள கஞ்சா பொட்டலங்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே மறைத்து வைக்கப்பட்டிருந்த போது கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் சந்தேக நபருடன் 107 கிலோ 840 கிராம் எடையுள்ள 40 கஞ்சா பொட்டலங்கள் கடற்படை பறிமுதல் செய்தது.

மேலும், கைது செய்யப்பட்ட இந்த கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு ரூ .32 மில்லியனுக்கும் மேல் என்று நம்பப்படுகின்றது.

கொவிட்- 19 பரவலை தடுக்கும் சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லியான் பகுதியில் வசிக்கும் 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன் குறித்த சந்தேகநபர் மற்றும் கேரள கஞ்சா பொதி மதுரங்கேனி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.