கடற்படையினர் கடந்த 03 நாட்களாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமான முறையில் கடத்தப்பட்ட 3704 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்

கடற்படையினரால் மன்னார், சவுத்பார், இருக்கலம்பிட்டி கடற்கரை பகுதியில் மற்றும் மன்னாரின் தெற்கு கடற்பகுதியில் 2021 செப்டம்பர் 16, 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற 3704 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் 04 உள்ளூர் சந்தேகநபர்கள் மற்றும் ஒரு டிங்கி படகும், 06 இந்திய சந்தேக நபர்கள் மற்றும் ஒரு இந்திய (01) படகும் கைது செய்யப்பட்டன.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வட மேற்கு கடற்படை கட்டளையால் மன்னாரின் தெற்கு கடலில், P-261 மற்றும் P-233 கடலோர ரோந்து கப்பல்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சர்வதேச கடல் எல்லையை மீறி இலங்கை கடல் பகுதிக்கு நுழைந்த சந்தேகத்திற்கிடமான இந்திய படகொன்று கவனிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதுடன் குறித்த படகில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முயன்ற 60 சாக்குகளில் நிரப்ப்ப்ட்ட சுமார் 2100 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஆறு இந்திய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய படகினால் கொண்டுவரப்பட்ட உலர்ந்த மஞ்சளை கடலில் வைத்து இலங்கை கப்பலுக்கு மாற்றிக் கொள்ள கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

மேலும், 2021 செப்டம்பர் 17 ஆம் திகதி இரவு வட மத்திய கடற்படை கட்டளையில் கஜபா நிருவனத்தில் கடற்படையினர் மன்னாரின் சவுத்பார் களப்பு பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக கடற்கரையை நோக்கி வந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று (01) ஆய்வு செய்யப்பட்டதுடன் அங்கிருந்து 20 பைகளில் அடைத்து வைக்கப்பட்ட சுமார் 866 கிலோ மற்றும் 200 கிராம் உலர் மஞ்சளுடன் குறித்த டிங்கி படகு மற்றும் நான்கு ( 04) சந்தேகத்திற்குரியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 2021 செப்டம்பர் 16 ஆம் திகதி காலை, வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட இலங்கை கடற்படை கப்பல் கஜபாவின் கடற்படையினர் குழு இருக்கலம்பிட்டி கடற்கரையில் சிறப்பு தேடுதல் நடவடிக்கையொன்று நடத்திய போது கடத்தல்காரர்களால் இருக்கலம்பிட்டி கடல் பகுதியில் மூழ்கி வைத்திருந்த உலர்ந்த மஞ்சள் 22 சாக்குகள் சுமார் 738 கிலோ மற்றும் 700 கிராம் (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டது.

கொவிட் 19 பரவுவதைத் தடுப்பதுக்காக வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட படகு மற்றும் 06 இந்திய சந்தேக நபர்கள் இன்று (2021 செப்டம்பர் 19) இலங்கை கடல் எல்லைக்கு வெளியே அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டதுடன் கைதுசெய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் பொதி சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆஜர்படுத்தப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், மன்னார்,சவுத்பார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 18 முதல் 48 வயதுக்குட்பட்ட மன்னார் பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்காக மன்னார் சுகாதார அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும், இந்த நடவடிக்கைகளின் போது கைதுசெய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் டிங்கி படகு சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு ஆஜர்படுத்தப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.