ரூ .68 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினரால் கைது செய்யப்பட்டன

இலங்கை கடற்படையினர் 2021 செப்டம்பர் 21, அன்று மன்னார் நரிவில்குளம் கடற்கரையில் நடத்திய சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது, கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 228 கிலோ கிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவை கைப்பற்றப்பட்டது.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை தீவைச் சுற்றி ரோந்து பணிகளை அதிகரித்துள்ளது. அதன்படி, 2021 செப்டம்பர் 21, ஆம் திகதி காலை, மன்னார், நரிவில்குளம் கடற்கரையில், வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புஸ்ஸதேவ நிறுவனத்தின் கடற்படையினரால் நடத்தப்பட்ட சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது, கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 06 சாக்குகளில் 103 பார்சல்களாக அடைக்கப்பட்ட 228 கிலோ மற்றும் 100 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றப்பட்டது.

இவ்வாரு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு ரூ. 68 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை தீ வைத்து அழிக்க திட்டமிட்டுள்ளது.