ரூ .27 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2021 செப்டம்பர் 24, அன்று மன்னார் வலைப்பாடு கடலில் மற்றும் கடற்கரையில் நடத்திய சிறப்பு ரோந்து நடவடிக்கையின் போது, கடத்தல்காரர்களால் கைவிடப்பட்ட 91 கிலோ கிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவை கைப்பற்றப்பட்டது.

வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புவனெக நிருவனத்தின் கடற்படையினர் 2021 செப்டம்பர் 24 ஆம் திகதி காலை, மன்னார் வலைப்பாடு கடற்கரையை நோக்கி வருகின்ற இரண்டு (02) சந்தேகத்திற்கிடமான படகுகளை கவனித்தனர். குறித்த படகுகள் வருகின்ற பகுதிக்கு Z-190 மற்றும் Z227 செட்ரிக் படகுகளை அனுப்பி கடற்படையினரால் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, இரண்டு படகுகளும் கைவிடப்பட்டு வலைப்பாடு கடற்கரையில் இருந்ததுடன் அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 பார்சல்களில் அடைக்கப்பட்ட 04 கிலோ மற்றும் 395 கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த இரு படகுகள் கைது செய்ய கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், வலைப்பாடு கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அருகிலுள்ள புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து சாக்குகளில் (05) அடைக்கப்பட்ட 39 பார்சல்களாக இருந்த 86 கிலோ 956 கிராம் கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர். இந்த முழு நடவடிக்கையின் போது, கடற்படையால் நாட்டிற்குள் கடத்தி வரப்பட்ட 91 கிலோ மற்றும் 351 கிராம் கஞ்சாவை கைப்பற்றியது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு ரூ .27 மில்லியனுக்கும் மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.

நடைமுறையில் உள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் கப்பல்களில் இருந்து கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட 04 கிலோ 395 கிராம் கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜெயபுரம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. வலைபாடு கடற்கரை பகுதியில் கடற்படையால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தீ வைத்து அழிக்கப்பட உள்ளது. மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு (02) படகுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்தப்படும் வரை கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளன.