வெடிபொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடைமுறைகளை நிருத்துவதுக்காக கடற்படையின் நடவடிக்கைகள்

2022 ஜனவரி 17 மற்றும் 20 ஆம் திகதிகளில் மன்னார் மற்றும் ஏறக்கண்டி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்தத் தயாராக இருந்த 11 நீர் ஜெல் குச்சிகளுடன் பல வெடிபொருட்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

ஒரு சில மீனவர்களால் வெடிபொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடைமுறைகளினால் பவள சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு மற்றும் மின்கள் முட்டையிடும் இடங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மீன்பிடிக்க வெடிமருந்துகளைப் பயன்படுத்துவது கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்பில் மட்டுமின்றி, மீன்வளம் குறைவதற்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த விடயம் தொடர்பில் விழிப்புடன் இருக்கும் இலங்கை கடற்படையினர், சில நபர்களால் மேற்கொள்ளப்படும் இத்தகைய சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதற்காக கடலோரப் பகுதிகளில் அடிக்கடி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படை கப்பல் விஜயபா நிருவனத்தின் கடற்படையினர் ஜனவரி 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, ஏறக்கண்டி கடற்கரைப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 09 நீர் ஜெல் குச்சிகளை கைப்பற்றினர்.

இதேபோன்று, 2022 ஜனவரி 17 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்தின் கடற்படையினர் மன்னார் கொந்தப்பிட்டி கடற்கரையில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்தத் தயாராக புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 02 நீர் ஜெல் குச்சிகள், 06 பாதுகாப்பு ஃபியூஸ்கள் மற்றும் 03 மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்களை மீட்டெடுக்கப்பட்டது.

வடமத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேவேளை, கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரியினால் மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மேலதிக விசாரணைக்காக ஆஜர்படுத்தப்படும் வரை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சட்டவிரோத வெடிபொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மீன்பிடி நடைமுறைகளை தடுப்பதுக்காக கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளும்.