சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை வடகடலில் கைப்பற்றப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு வடக்கே உள்ள கடற்பகுதியில் இன்று (2022 மார்ச் 31) இலங்கை கடலோர காவல்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 66 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகத்திற்குரிய மூன்று பேர் (03) மற்றும் ஒரு டிங்கி (01) படகு கைது செய்தனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்க, கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடலோர காவல்படையின் CG 409 விரைவுத் தாக்குதல் ரோந்துப் படகின் கடற்படையினர் இன்று (2022 மார்ச் 31) யாழ்ப்பாணம் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு வடக்கு கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை சோதனை செய்து இரண்டு சாக்கு மூட்டைகளில் 30 பார்சல்களாக நாட்டிற்கு கடத்தப்பட்டு வந்த சுமார் 66 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்தனர்.

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் தெரு மதிப்பு சுமார் 20 மில்லியன் ரூபா என நம்பப்படுகிறது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முல்லைத்தீவு மற்றும் மாதகல் பிரதேசங்களைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு காங்கேசன்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.