6200 மில்லியன் ரூபா பெறுமதியான 325 கிலோகிராம் போதைப்பொருள் தென் கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து 2022 ஏப்ரல் 12ஆம் திகதி மாலை காலி, தொடந்துவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட அதிரடி நடவடிக்கையின் போது கடல் வழியாக நாட்டுக்குள் கடத்த முயச்சித்த ஹெரோயின் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 300 கிலோ எடையுள்ள போதைப்பொருள் மற்றும் ஐஸ் என சந்தேகிக்கப்படுகின்ற போதைப்பொருள் 25 கிலோவை கொண்ட உள்நாட்டு பல நாள் மீன்பிடி படகொன்றும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு டிங்கி படகும், ஒரு கெப் மற்றும் முச்சக்கர வண்டிகளுடன் 11 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டர்.

அரச புலனாய்வு சேவை வழங்கிய துல்லியமான உளவுத்துறையின் அடிப்படையில், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர் உள்ளூர் மற்றும் சர்வதேச கடல்களை உள்ளடக்கி இரண்டு வாரங்கள் தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். அதன்படி, 2022 ஏப்ரல் 12, அன்று மாலை, இலங்கை கடற்படைக் கப்பல் ஒன்று, காலி, தொடந்துவ கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த இலங்கையின் பல நாள் மீன்பிடிப் படகொனடறை சோதனை செய்தது. அப்போது குறித்த பல நாள் மின்பிடி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 13 பொதிகளில் இருந்து சுமார் 300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 25 கிலோகிராம் ஐஸ் போதைபொருள் கடற்படையினர் மீட்டுள்ளனர். போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடி படகு மற்றும் படகில் இருந்த ஆறு (06) சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் போது மேலும் ஒரு டிங்கி, ஒரு கெப் மற்றும் முச்சக்கர வண்டியுடன் ஐந்து (05) சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாரு போதைப்பொருளுடன் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பல நாள் மின்பிடி படகு 2022 மார்ச் 26 அன்று பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பல நாள் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்வதாக கூறி சென்றுள்ளதுடன் சர்வதேச கடற்பரப்பில் வெளிநாட்டு கடத்தல்காரர்கள் ஊடாக பல நாள் மீன்பிடி படகில் போதைப்பொருளை இந்த நாட்டுக்கு கடத்த முயற்சித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அத்துடன், இந்த நடவடிக்கையின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மொத்த வீதிப் பெறுமதி 6200 மில்லியன் ரூபாவாகும் என நம்பப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 முதல் 36 வயதுக்குட்பட்ட ஹிக்கடுவ, பூஸ்ஸ, கலவான, பேரிலவத்தை மற்றும் மொரகொட ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் நடத்துகின்றன.

மேலும், நாட்டின் முதல் பாதுகாப்பு வளையமாக இலங்கை கடற்படையின் பங்களிப்பை தொடர, அரச புலனாய்வு சேவை உட்பட சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதுபோன்ற வெற்றிகரமான நடவடிக்கைகளை கடற்படை தொடர்ந்து மேற்கொள்ளும்.