மன்னார் தெற்கு கடற்பரப்பில் 59 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஏப்ரல் 16 ஆம் திகதி மன்னாருக்கு தெற்கு கடற்கரையில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 197 கிலோ 60 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த கடற்படை பல ரோந்துப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இலங்கை கடற்படை கப்பல் மிஹிகத மன்னாருக்கு தெற்கு கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது கடலில் சந்தேகத்திற்கிடமான பல பைகள் மிதப்பதைக் கண்டறிந்து ஆய்வு செய்ததில், இரண்டு சாக்கு மூட்டைகளில் 50 பொதிகளாக அடைக்கப்பட்ட சுமார் 197 கிலோ 60 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

அப்பகுதியில் கடற்படையினர் ரோந்து சென்றதால் கடத்தல்காரர்கள் கேரளா கஞ்சாவை எடுத்துச் செல்ல முடியாமல் கடற்கரையில் விட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. 59 மில்லியனுக்கும் மேல் என நம்பப்படுகிறது.

இவ்வாரு கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை ஒழுக்காற்று பிரிவினரின் மேற்பார்வையில் தீயிட்டு அழிக்கப்படவுள்ளது.