மன்னாரில் மற்றுமொரு கேரள கஞ்சா பொதி கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஏப்ரல் 18) மன்னார், ஊருமலை கடற்கரையில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 50 கிலோ 380 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனர்.

அதன் படி, வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்மன்னா நிருவனத்தின் கடற்படையினர் மன்னார் ஊறுமலை கடற்கரையில் இன்று (2022 ஏப்ரல் 18,) காலை மேற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது கடற்கரையில் இருந்த சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டையொன்றை ஆய்வு செய்தனர் அப்போது குறித்த சாக்கு மூட்டையில் இருந்து 14 பார்சல்களில் அடைக்கப்பட்ட 50 கிலோ 380 கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அப்பகுதியில் கடற்படையினர் ரோந்து சென்றதால் கடத்தல்காரர்கள் கேரளா கஞ்சாவை எடுத்துச் செல்ல முடியாமல் கடற்கரையில் விட்டுச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. 15 மில்லியனுக்கும் மேல் என நம்பப்படுகிறது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.