சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க 13 கடற்படைக் குழுக்கள் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளன

தீவில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று காலை (01 ஜூன் 2022) மேற்கு, சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ள அபாய பகுதிகளுக்கு 13 நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர்.

களு மற்றும் ஜின் ஆற்றுப் பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில பகுதிகளில் நீர் மட்டம் நிரம்பி வழிவதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை நிவாரணக் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன்படி, மேற்கு கடற்படை கட்டளை களுத்துறை மாவட்டத்தில் பரகொட, பந்துரலிய, புலத்சிங்கள மற்றும் பெலவத்த பகுதிகளுக்கும், இரத்தினபுரி நகரம், தெல்கொட, அயகம மற்றும் முவகம பகுதிகளுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் தவலம, ஹினிதும, நாகொட மற்றும் மாபலகம பகுதிகள் மற்றும் காலி மாவட்டத்தில் 13 நிவாரண அணிகள் நிறுத்தப்பட்டன.

மேலும், களுத்துறையின் பரகொட மற்றும் கூடலிகம பிரதேசங்களிலும் காலியின் ஹினிதும பிரதேசத்திலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றும் இன்று (2022 ஜூன் 1) க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்களுக்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் நிவாரணங்களை வழங்கி வருகின்றன.

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மேற்கு கடற்படை கட்டளையின் 25 நிவாரண குழுக்களும், தெற்கு கடற்படை கட்டளையின் 05 நிவாரண குழுக்களும், வடமேற்கு கடற்படை கட்டளையின் 10 நிவாரண குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.