சுமார் 120 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஜூன் 19 ஆம் திகதி காலை உடப்புவ பெரியபாடு கடற்கரையில் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 543 கிலோகிராம் (ஈரமான எடை உட்பட) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

கடல் வழியாக மெற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த கடற்படை பல ரோந்துப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி நிறுவனத்தின் கடற்படையினர் இன்று (2022 ஜூன் 19) காலை உடப்புவ பெரியபாடு கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது, கரைக்கு அடித்து வரப்பட்ட 543 கிலோகிராம் (ஈரமான எடை உட்பட) 173 கஞ்சாபொதிகள் கைப்பற்றினர்.

குறித்த பகுதியில் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் விளைவாக கடத்தல்காரர்கள் இந்த கேரள கஞ்சா பொதிகளை கைவிட்டு கரைக்கு கொண்டு வர முடியாமல் தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுகிறது. கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 120 மில்லியன் என நம்பப்படுகிறது.

இதேவேளை, பெரியபாடு கடற்கரை பகுதியில் தற்போது மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.