சுமார் 67 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் இன்று (2022 ஜூலை 11) மன்னார், தேவம்பிட்டி கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடற்பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 225 கிலோ கிராமுக்கு அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்துள்ளனர்.

கடல் வழியாக மெற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த கடற்படை பல ரோந்துப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, மன்னார், தேவம்பிட்டி கடற்கரைப் பகுதியில் வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புவனேக நிறுவனத்தின் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான வகையில் கடற்கரைக்கு வந்த டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டது. அப்போது, டிங்கி படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 99 பார்சல்களில் பொதி செய்யப்பட்ட 203 கிலோகிராம் கேரள கஞ்சா, டிங்கி படகு மற்றும் சந்தேக நபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

மேலும், வடமத்திய கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் தம்மன்னா நிருவனத்துடன் இணைக்கப்பட்ட மரைன் படைப்பிரிவின் வீரர்களால் இன்று (2022 ஜூலை 11) மேற்கொள்ளப்பட்ட ரோந்துப் பணியின் போது, 22 கிலோ 140 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள 05 கேரள கஞ்சா பொதிகளை மீட்கப்பட்டது.

இதன்படி, கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி 67 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என நம்பப்படுகிறது.

மேலும், முழங்காவில் பகுதியில் கேரள கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 45 வயதுடைய தேவம்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டதுடன் குறித்த சந்தேகநபர், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இலுப்புக்கடவாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அத்துடன், மன்னார் மணல்மேடு பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகை, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.