பல கேரள கஞ்சா பொதிகள் வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை விரட்டுவதற்காக 2022 ஜூலை 18 ஆம் திகதி மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, கச்சத்தீவு அருகே கடலில் மிதந்த சுமார் 30 கிலோகிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சாவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட நான்காவது விரைவுத் தாக்குதல் படையைச் சேர்ந்த P412 விரைவுத் தாக்குதல் படகின் கடற்படையினர் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீன்பிடி படகுகளை விரட்டுவதற்காக 2022 ஜூலை 18, ஆம் திகதி மேற்கொன்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது கச்சத்தீவுக்கு அருகில் மிதந்து கொண்டிருந்த சுமார் 30 கிலோகிராம் (ஈரமான எடை) எடையுள்ள 09 பொதிகளில் இருந்த இந்த கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

கடற்படை நடவடிக்கையின் காரணமாக இந்த கேரள கஞ்சாவை கரைக்குக் கொண்டுவர முடியாமல் கடத்தல்காரர்கள் கைவிட்டு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, மேலும் இந்த கேரளா கஞ்சாவின் மொத்த தெரு மதிப்பு சுமார் 9 மில்லியன் ரூபா என நம்பப்படுகிறது.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.