சுமார் 4 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2022 ஜூலை 23 ஆம் திகதி இரவு மன்னார், பேசாலை பகுதியில் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 14 கிலோ 980 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்தின் கடற்படையினர் மன்னார் பொலிஸாருடன் இணைந்து மன்னார் பேசாலை பகுதியில் 2022 ஜூலை 23 ஆம் திகதி இரவு விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன் அங்கு ஏழு பார்சல்களில் அடைக்கப்பட்ட 14 கிலோ 980 கிராம் கேரள கஞ்சாவை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 4 மில்லியன் ரூபாய்க்கு மேல் இருக்கும் என நம்பப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேசாலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.