திருகோணமலை கடலில் தத்தளித்த மூன்று மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் மீட்பு

திருகோணமலை வெளி துறைமுகப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளான சிறிய மீன்பிடிப் படகொன்றில் இருந்த மூன்று (03) மீனவர்களை 2022 ஆகஸ்ட் 02 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மீட்டனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான P 244 என்ற கரையோர ரோந்துப் படகின் கடற்படையினர் 2022 ஆகஸ்ட் 02 ஆம் திகதி காலை திருகோணமலை வெளி துறைமுக கடல் பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த போது, சிறிய மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அவதானித்துள்ளனர். அதன்படி, மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, விபத்துக்குள்ளான படகில் இருந்து கடலில் விழுந்த மூன்று (03) மீனவர்களை கடற்படையினர் மீட்டு பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.

கடற்படையினரால் மீட்கப்பட்ட மீனவர்கள் திருகோணமலை சீன துறைமுகம் மற்றும் கிண்ணியா பிரதேசத்தில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு வலயத்தில் உள்ள கடல்சார் மற்றும் மீனவ சமூகத்திற்கு தேவையான நிவாரணங்களை உடனடியாக வழங்க இலங்கை கடற்படை தொடர்ந்து தயாராக உள்ளது.