தொடங்கொட, அகலிய மற்றும் வக்வெல்ல பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை கடற்படையினரால் அகற்றப்பட்டது

பத்தேகம பிரதேசத்தில் கிங் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தொடங்கொட, அகலிய மற்றும் வக்வெல்ல பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2022 ஒக்டோபர் 25, 26, 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டன.

கனமழை காரணமாக, ஜின் கங்கையில் நீர் மட்டம் உயர்வதால், குப்பைகள் மற்றும் மர எச்சங்கள் இந்த பாலங்களின் கீழ் சிக்கி, ஆற்றின் கீழ் நீரோடைக்கு இடையூறாக உள்ளன. இந்த நிகழ்விற்கு பதிலளிக்கும் வகையில், அந்தந்த பகுதிகளில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைத் தவிர்க்க, பாலங்களுக்கு அடியில் சேகரிக்கப்பட்ட இந்த மரக் குப்பைகளை அகற்றும் பணியில் இலங்கை கடற்படை அடிக்கடி ஈடுபடுகிறது.

அதன்படி, தென் கடற்படைக் கட்டளையின் சுழியோடி பிரிவைச் சேர்ந்த மாலுமிகள் குழு மற்றும் உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் படை, நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் இணைந்து பாலங்களில் தேங்கியிருந்த கழிவுகளை அகற்றி, தண்ணீரை சீராக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். குறித்த நடவடிக்கையால் இப்பகுதியில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தை தடுக்க முடிந்தது.