இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகள் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக வடக்கு கடற்பரப்பில் 2022 நவம்பர் 28 ஆம் திகதி மாலை இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் 24 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் காரைநகர், கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பாற்பட்ட இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டன.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணியை அதிகரித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

அதன்படி, 2022 நவம்பர் மாதம் 28 ஆம் திகதி மாலை, யாழ்ப்பாணம் கோவிலன் கலங்கரை விளக்கத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிக் படகுகள் பலவற்றை அவதானித்துள்ள வடக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் குறித்த மீன்பிடி படகுகள் விரட்டுவதற்காக வடக்கு கடற்படை கட்டளைக்குட்பட்ட 4 வது விரைவு தாக்குதல் படைப்பிரிவுக்கு சொந்தமான விரைவு தாக்குதல் படகுகள் மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் படகுகள் அனுப்பியுள்ளது. அங்கு யாழ்ப்பாணம், காரைநகர், கோவிலன் கலங்கரை விளக்கத்தை அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு வந்த 05 இந்திய மீன்பிடி படகுகளுடன் 24 இந்திய மீனவர்களும் அவர்களது மீன்பிடி சாதனங்களும் கைது செய்யப்பட்டது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடி படகுகளும், படகில் இருந்த இருபத்தி நான்கு (24) இந்திய மீனவர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மைலடி மீன்பிடி பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

மேலும், இந்த விசேட நடவடிக்கையுடன் 2022 ஆம் ஆண்டில் இதுவரைமேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இந்த நாட்டின் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 35 இந்திய மீன்பிடி படகுகளுடன் 252 இந்திய மீனவர்களை கடற்படையினர் கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உரிய திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், வெளிநாட்டு மீனவர்கள் உள்நாட்டு கடற்பரப்பை அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் உள்ளுர் மீனவ சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும், கடல்சார் சூழலின் பல்லுயிர் சேதத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.