சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 1447 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் நீர்கொழும்பு கடல் மற்றும் களப்பு பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது

நீர்கொழும்பு கடற்பரப்பில் மற்றும் களப்பு பகுதியில் 2023 ஜனவரி 26ஆம் திகதி இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்படை நடவடிக்கைகளின் காரணத்தினால் சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வர முடியாமல் கடலில் கைவிடப்பட்ட 1447 கிலோவுக்கும் மேற்பட்ட பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடல் வழிகளாக மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக இலங்கை கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதி மற்றும் கரையோரங்களை உள்ளடக்கி பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.

அதன்படி 2023 ஜனவரி 26 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படையின் நான்காவது விரைவு தாக்குதல் படகுகள் படையணிக்கு சொந்தமான இரண்டு (02) விரைவு தாக்குதல் படகுகளின் கடற்படையினர் நீர்கொழும்பு கடற்பகுதியில் ரோந்து சென்ற போது குறித்த கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த 21 மூட்டைகளை அவதானித்து ஆய்வு செய்தனர். அங்கு கடற்படை நடவடிக்கைகளின் காரணத்தினால் இலங்கைக்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்களால் கடலில் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 1026 கிலோ 770 கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும், கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கௌனி நிறுவனத்தின் கடற்படையினர் 2023 ஜனவரி 26 ஆம் திகதி நீர்கொழும்பு பிடிபன களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள மற்றுமொரு விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த களப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு ஒன்றை ஆய்வு செய்துள்ளதுடன் அங்கு 420 கிலோ 900 கிராம் பீடி இலைகள் (ஈரமான எடை) பொதி செய்யப்பட்டு 13 பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட 1447 கிலொ 670 கிராம் பீடி இலைகள் மற்றும் டிங்கி படகு கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.