சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 08 பேர் மன்னாரில் கடற்படையினரால் கைது

2023 மார்ச் மாதம் 13 ஆம் திகதி அதிகாலை மன்னார், சிலாவத்துறை மற்றும் வங்காலே கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது நீர்மூழ்கிக் கருவிகள், 814 கடல் அட்டைகள் மற்றும் இரண்டு (02) டிங்கி படகுகளுடன் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை பிடித்த 08 பேர் கைது செய்யப்பட்டனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, 2023 மார்ச் 13 ஆம் திகதி அதிகாலை, வடமேற்கு கடற்படைக் கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிருவனத்துடன் இணைக்கப்பட்ட P 155 கரையோர ரோந்துக் கப்பலின் கடற்படையினர் மன்னார், சிலாவத்துறை கடற்பகுதியில், சிறப்பு தேடுதல் நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த கடற்பகுதியில் முறையான அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் இரவு சுழியோடி செயற்பாடுகளை மேற்கொண்டு கடல் அட்டைகளை பிடித்த மூன்று பேர் (03) சுழியோடி கருவிகள், சுமார் 580 கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகொன்று (01) கைது செய்யப்பட்டது.

மேலும், 2023 மார்ச் 13 ஆம் திகதி காலை, வட மத்திய கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் புஸ்ஸதேவ நிறுவனத்தின் வங்காலே பிரிவினால் மன்னார், வங்காலே கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளைப் பிடித்துக் கொண்டிருந்த ஐந்து பேர் (05) 234 கடல் அட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் 33 மற்றும் 54 வயதுக்கு இடைப்பட்ட கல்பிட்டி மற்றும் வங்காலே பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர்கள், நீர்மூழ்கி உபகரணங்கள், டிங்கி படகு மற்றும் கடல் அட்டைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி மற்றும் மன்னார் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.