2000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் ஜா-எல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்

இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து 2023 மார்ச் மாதம் 17 ஆம் திகதி மாலை ஜாஎல பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையிலன் போது சட்டவிரோதமாக விற்பனை செய்ய 2000 வெளிநாட்டு சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற ஒருவர் (01) கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க கடற்படை அடிக்கடி தனது உதவியை சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு வழங்குகிறது. அதன்படி, கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படை கப்பல் கெமுனு நிறுவனத்தின் கடற்படையினர் மற்றும் ஜா-எல பொலிஸார் இணைந்து ஜா-எல பகுதியில் 2023 மார்ச் 17 அன்று மேற்கொண்ட சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது ஜா-எல ஏகல வீதியில் பயணித்த சந்தேகநபர் ஒருவரை சோதனையிட்டதுடன், அவர் சட்டவிரோதமாக விற்பனை செய்ய கொண்டு சென்ற 2000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 21 வயதுடைய ராகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர் 2000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜா-எல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.