யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையில் இருந்து 28 நீர் ஜெல் குச்சிகளை கடற்படையினர் கைப்பற்றினர்

2023 மார்ச் மாதம் 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரையில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிபொருட்களின் 28 குச்சிகள் கைப்பற்றப்பட்டன.

வெடிப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளினால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, கடற்படைக்கு கிடைத்த தகவலின்படி, 2023 மார்ச் மாதம் 17 ஆம் திகதி யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரைப் பகுதியில் வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவனத்தின் கடற்படையினரால் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடற்கரைக்கு அருகில் உள்ள ஒரு புதரின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் (Water Gel) எனப்படும் வர்த்தக வெடிபொருட்களின் 28 குச்சிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

மேலும், வெடிமருந்துகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்காக இந்த வணிக வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது, மேலும் இந்த வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் வரை கடற்படையின் காவலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.