சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முயற்சித்த பீடி இலைகள் ஒருதொகை வென்னப்புவ கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் இன்று (மார்ச் 22, 2023) அதிகாலை வென்னப்புவ கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, கடலில் மிதந்துகொண்டிருந்த சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டு வரமுயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 379 கிலோவிற்கும் அதிகமான பீடி இலைகள் (ஈரமான எடை) கைது செய்துள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி, கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் கெலனி நிருவனத்தின் கடற்படையினர் உட்பட நீர்கொழும்பு கடற்படை பிரிவின் விசேட படகுகள் படையணியினர் இன்று (2023 மார்ச் 22) காலை வென்னப்புவ கடற்பகுதியில் சிறிய கப்பல்களை ஈடுபடுத்தி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதியில் மிதந்துகொண்டிருந்த சந்தேகத்திற்குரிய 12 சாக்கு மூட்டைகள் கண்காணிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. அங்கு சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 379 கிலோ 300 கிராம் (ஈரமான எடை) பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

மேலும், கடற்படையின் நடவடிக்கையால் கரைக்கு கொண்டு வர முடியாமல் கடத்தல்காரர்கள் இந்த பீடி இலைகளை கடலில் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது, மேலும் இந்த நடவடிக்கையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.