இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 02 இந்திய மின்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டுவதற்காக இன்று (2023 மார்ச் 23) காலை வடக்கு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம், அனலைதீவு மற்றும் கோவிலன் பகுதிகளுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பை அத்துமீறி வெளிநாட்டு மீன்பிடி படகுகள் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கை கடற்படை இலங்கை கடற்பரப்பில் ரோந்து பணியை அதிகரித்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட பல இந்திய மீன்பிடி படகுகளைக் கண்காணித்த வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் இன்று (2023 மார்ச் 23) காலை, வடக்கு கடற்படை கட்டளையின் நான்காவது விரைவுத் தாக்குதல் படைக்கு சொந்தமான விரைவுத் தாக்குதல் படகுகள் மூலம் இந்திய மீன்பிடிப் படகுகளை விரட்டும் சிறப்பு நடவடிக்கையொன்றை மேற்கொன்டுள்ளனர். அப்போது யாழ்ப்பாணம், அனலைதீவு மற்றும் கோவிலன் பகுதிகளுக்கு அப்பால் இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு இந்திய மீன்பிடி படகுகளுடன் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட இரண்டு இந்திய மீன்பிடி படகுகள் (02) மற்றும் படகில் இருந்த இந்திய மீனவர்கள் 12 நபர்களும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

மேலும், வெளிநாட்டு மீனவர்கள் நாட்டு கடற்பரப்பை அத்துமீறி மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளினால் உள்ளுர் மீனவ சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும், கடல்சார் சூழலின் பல்லுயிர் சேதத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் கடற்படையினர் தொடர்ந்தும் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.