சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட உலர் கடல் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கல்பிட்டி கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

கல்பிட்டி, சின்னாரிச்சாலை கடற்பரப்பில் 2023 மே 18 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 193 கிலோ கிராம் (ஈரமான எடை) உலர் கடல் அட்டைகள் மற்றும் பல கடத்தல் பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் (02), ஒரு டிங்கி படகு (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டது.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படைக் கப்பல் விஜய நிறுவனத்தின் மரையின் கடற்படையினர், கல்பிட்டி சின்னாரிச்சாலை கடற்பகுதியில் கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இரவு சிறிய கப்பல்கள் பயன்படுத்தி மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது கடல் வழியாக கரைக்கு வந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று (01) கண்காணிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதுடன் அங்கு சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 193 கிலோ கிராம் உலர் கடல் அட்டைகள் (ஈரமான எடை), 33600 ஷாம்பு பாக்கெட்டுகள் (ஒவ்வொன்றும் 6 மில்லி), 198 தைலம் குப்பிகள் (தலா 50 கிராம்), 1 ஏ/சி ஆலை மற்றும் Voltage Stabilizer 230 V இயந்திரமுடன் சந்தேகநபர்கள், கடத்தல் பொருட்கள் மற்றும் டிங்கி படகு கைப்பற்றப்பட்டது.

மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட உலர் கடல் அட்டைகள் உள்ளிட்ட சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பொருட்கள், டிங்கி படகு மற்றும் சந்தேகநபர்கள் இருவர் (02) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.