சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 1947 கிலோ கிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் புத்தளம், கரதீவு கடற்கரைப் பகுதியில் இன்று (2023 ஜூலை 02) அதிகாலை மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது குறித்த கடற்கரைப் பகுதிக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தேழு (1947) கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் பல கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் விஜய நிருவனத்தின் கடற்படையினர் இன்று (2023 ஜூலை 02,) அதிகாலை புத்தளம் கரதீவு கடற்கரையில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடற்கரைக்கு கொண்டு வரப்பட்ட அறுபத்தைந்து (65) பொதிகளில் இருந்த 1947 கிலோ கிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் புத்தளம், கரதீவு பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேகநபர் (01) மற்றும் 1947 கிலோ கிராம் பீடி இலைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கல்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.