27 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான கேரள கஞ்சா யாழ்ப்பாணம் அனலத்தீவில் வைத்து கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் அனலத்தீவில் 2023 நவம்பர் மாதம் 10 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அறுபத்தொன்பது (69) கிலோகிராம்களுக்கு அதிகமான கேரள கஞ்சா (ஈரமான எடை) கைப்பற்றப்பட்டது.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் எலார நிறுவனத்தின் கடற்படையினர் 2023 நவம்பர் மாதம் 10 ஆம் திகதி காலை யாழ்ப்பாணம் அனலத்தீவில் மேற்கொண்டுள்ள இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கரையோரப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டையொன்று மீட்டு ஆய்வு செய்தனர். அங்கு பதினெட்டு (18) பொதிகளில் பொதி செய்யப்பட்ட சுமார் அறுபத்தொன்பது (69) கிலோ ஐந்து (05) கிராம் (ஈரமான எடை) கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த வீதி பெறுமதி இருபத்தி ஏழு (27) மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என நம்பப்படுகிறது, மேலும் குறித்த கேரள கஞ்சா பொதி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.