1200 போதை மாத்திரைகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் மன்னார் பிரிவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இனைந்து 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி சிலாவத்துறை, நானட்டான் பகுதியில் நடத்திய கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது ஆயிரத்து இருநூறு (1200) போதை மாத்திரைகளுடன் (Pregabalin Capsules) இரண்டு சந்தேகநபர்கள் (02) கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிறுவனத்தின் கடற்படையினர் மன்னார் பிரிவு பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பணியகத்துடன் இணைந்து 2024 பெப்ரவரி 07 ஆம் திகதி சிலாவத்துறை, நானட்டான் பிரதேசத்தில் நடத்திய இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்தின் பேரில் இருவரை (02) சோதனை செய்தனர். அப்போது குறித்த நபர்களிடமிருந்து விற்பனைக்கு தயார் செய்யப்பட்ட ஆயிரத்து இருநூறு (1200) (Pregabalin Capsules) போதை மாத்திரைகள் கைது செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 23 மற்றும் 45 வயதுடைய நானட்டான் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் (02) மற்றும் போதைப்பொருள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.