சட்டவிரோதமாக விற்பனைக்கு தயார்படுத்தப்பட்ட 5033 போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கல்முனையில் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2024 ஏப்ரல் 04 ஆம் திகதி கல்முனை பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது முறையான அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனைக்கு தயார்படுத்தப்பட்ட ஐயாயிரத்து முப்பத்து மூன்று (5033) வலி நிவாரண மாத்திரைகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் திகாயு நிறுவனத்தின் கடற்படையினர் மற்றும் பெரியநீலவணை பொலிஸார் இணைந்து 2024 ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி கல்முனைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனையிட்டனர். அங்கு, குறித்த வீட்டில் செல்லுபடியான அனுமதிப்பத்திரம் இன்றி விற்பனைக்காக தயார்படுத்தப்பட்டிருந்த ஐந்தாயிரத்து முப்பத்து மூன்று (5033) வலி நிவாரண மாத்திரைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்முனை மருதமுனை 6 பகுதியை சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (01) மற்றும் வலிநிவாரணி மாத்திரைகள் மேலதிக விசாரணைகளுக்காக கல்முனை உணவு மற்றும் மருந்துப் பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.