பல வர்த்தக வெடிபொருட்கள் புல்முடை கடற்கரை பகுதியில் வைத்து கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டது

இலங்கை கடற்படையினர் 2024 ஏப்ரல் 05 ஆம் திகதி புல்முடை, ஜின்னாபுரம் கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, குறித்த கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதியொன்றில் இருந்து வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகளின் ஆறு (06) குச்சிகள், 01 பாதுகாப்பு உருகி மற்றும் 20 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள் மீட்கப்பட்டன.

வெடிமருந்துகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத மீன்பிடித்தலால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி 2024 ஏப்ரல் 05 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படை கப்பல் ரன்வேலி நிருவனத்தின் கடற்படையினர் புல்முடை, ஜின்னாபுரம் கடற்கரை பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது, கடற்கரையில் உள்ள புதரில் மரத்தடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வாட்டர் ஜெல் எனப்படும் வர்த்தக வெடிமருந்துகளின் ஆறு (06) குச்சிகள், 01 பாதுகாப்பு உருகி மற்றும் 20 மின்சாரமற்ற டெட்டனேட்டர்கள் இவ்வாறு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

இந்த வெடிபொருட்களை பின்னர் மீன்பிடிக்க பயன்படுத்தும் நோக்கில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதேவேளை, மீட்கப்பட்ட வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புல்மோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.