நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 நபர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடி முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தல் மூலம் கடல் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஜூலை 25 மற்றும் 28 ஆகிய திகதிகளில் திருகோணமலை, கின்னியா, முல்லைதீவு மற்றும் நிலாவேலி கடல் பகுதிகளில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளினால் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 15 நபர்கள் மற்றும் மீன்பிடி பொருட்கள் ஆகியவை கடற்படையால் கைது செய்யப்பட்டன.

29 Jul 2020

கடற்படையின் சோதனை நடவடிக்கைகளினால் நான்கு சந்தேக நபர்கள் போதைப்பொருட்களுடன் கைது

நாட்டில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2020 ஜூலை 24 ஆம் திகதி வட மத்திய மற்றும் கிழக்கு கடற்படைக் கட்டளைகளில் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற நடவடிக்கைகளின் போது, 09 கிலோவிற்கு மேற்பட்ட கேரள கஞ்சா மற்றும் பிற சட்டவிரோத போதைப்பொருட்களை வைத்திருந்ததாக 04 சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்தனர்.

25 Jul 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 நபர்கள் கடற்படையால் கைது

இலங்கை பெருங்கடல் பிராந்தியத்தின் கடல் மற்றும் மீன்வள வளங்களை பாதுகாக்க பல ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வரும் கடற்படை, 2020 ஜூலை 18 முதல் 23 வரை கிழக்கு கடற்படை கட்டளையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 27 நபர்களுடன் சட்டவிரோத மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பல மீன்பிடி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

24 Jul 2020

தெற்கு கடலில் பாதிக்கப்பட்ட கென்ய கப்பலுக்கு கடற்படையின் உதவி

கென்யக் கொடியின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு கப்பலை பாதுகாப்பாக தரைக்கு கொண்டுவர கடற்படை உதவியது, இது பல நாட்களாக அனைத்து இயந்திரங்களின் முழுமையான செயலிழப்பு காரணமாக தெற்கு கடலில் துன்பத்தில் இருந்தது.

24 Jul 2020